ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதனையடுத்து, மேன் முறையீட்டு நீதிமன்றில் ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
50,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 500,000 ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.