அரச ஊழியர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க நடவடிக்கை
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

2024 வரவு - செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் முதல் 5,000 ரூபாய் இந்த ஜனவரி மாதம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்த தகவலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், நெருக்கடியான நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்தார்.