2023 O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
3,87,648 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 452,979 பரீட்சார்த்திகளுடன், நாடு முழுவதும் 3,527 மையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிடலாம்.