நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
246,521 பாடசாலை பரீட்சாத்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துன், பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது.
ஏதேனும் அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கங்களைத் தொடர்பு கொண்டும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.