சின்னப் பையன் வாழ்க்கையை காலி பண்ணிராதீங்க.. கவுதம் கம்பீர்  எச்சரிக்கை!

வயதை கருத்தில் கொண்டு ஷிகர் தவானை நீக்கி விட்டு, இளம் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்தது தேர்வுக் குழு. 

பெப்ரவரி 7, 2024 - 17:17
சின்னப் பையன் வாழ்க்கையை காலி பண்ணிராதீங்க.. கவுதம் கம்பீர்  எச்சரிக்கை!

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அதிகமாக புகழ்ந்து, அவரது எதிர்காலத்தை சீர்குலைத்து விட வேண்டாம் என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வயதை கருத்தில் கொண்டு ஷிகர் தவானை நீக்கி விட்டு, இளம் அதிரடி இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்தது தேர்வுக் குழு.

எந்த அணியிலும் ரோகித் சர்மா விளையாட முடியாது.. செக் வைத்த மும்பை!

அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்து இருக்கிறார்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்த உடன் அவரை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கருத்து வெளியிட்ட கவுதம் கம்பீர், அவரை புகழ்ந்து தள்ளி ஒரு ஹீரோவாக மாற்றி விடாதீர்கள். அவருக்கு என ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டால் அவர் தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாமல் போய்விடும் என எச்சரித்து இருக்கிறார்.

அந்த இளைஞனை விளையாட விடுங்கள். கடந்த காலங்களில் ஊடகங்கள், அவர்களை ஹீரோக்கள் போல் காட்டி, அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி பேசும் பழக்கம் உள்ளது" என்று கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!