நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை - விவரம் இதோ!
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாயாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இதேவேளை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளையும் லங்கா ஐஓசி நிறுவனம் திருத்தி உள்ளது.
அதன்படி, ரூபாய் 309 ஆக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூபாய் 299 ரூபாயாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.