கொழும்புக்கு மாற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா
குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு விழா கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜயவர்தனபுராவில் உள்ள கோட்டே பகுதியில் அமைந்துள்ள உயர்தர ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முயற்சியின் கீழ், சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவை குருநாகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எவ்வாறாயினும், ஆண்டு நிறைவை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர போன்றவர்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவின் போது பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் இணைக்கக் கூடிய ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.