பாடசாலை மாணவிகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கொண்டு வரப்படும் குறித்த இலவச திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் இன்று (27) அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நப்கின்களை (Sanitary towels) இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குளியலறையில் உயிரிழந்த இளம் பெண்.. மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்
இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும். முன்னோடி திட்டமாக 300,000 பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
சுமார் ஒரு மில்லியன் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நப்கின்கள் பின் வழங்கப்படும் என” என அமைச்சர் கூறியுள்ளார்.