மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதம்

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஓட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

ஜனவரி 10, 2024 - 21:56
ஜனவரி 10, 2024 - 21:58
மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதம்

பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை - பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்துடன், இரு வாகனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இரு சொகுசு கார்கள், வேன் மற்றும் ஓட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஓட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

இன்று (10) முற்பகல் 10 மணியளவிலேயே இந்த மண்சரிவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!