நோர்வூட் தோட்டத்தில் மாணவர்கள் நால்வர் மாயம்
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் மாணவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நோர்வூட் பகுதிகியல் பாடசாலை மாணவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் நால்வர், நேற்று (04) வீட்டை விட்டுச் சென்ற போதும் வீடு திரும்பவில்லை என மாணவர் ஒருவரின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பாடசாலை மாணவர்களான ராஜ்குமார் அனுஷன், தனஞ்சய கஜரூபன், சுப்பிரமணியம் தனிஷ்க மற்றும் கர்திபன் நியோன் ஆகியோர் அந்த தோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி பயின்று வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் மாணவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.