மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமற்போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.