ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது
ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

போலியான கிரேக்க நாட்டு வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த வர்த்தக குடும்பம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பத்தினர் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.