வெளிநாட்டு பெண்ணிடம் கிருலப்பனையில் கொள்ளை
கிருலப்பனையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்தியரான பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பு பிரதான வீதியொன்றில் வைத்து பங்களாதேஷ் பெண் ஒருவரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்தியரான பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் நடைபாதையிலும் அதன் பின்னர் பிரதான வீதியின் நடுவிலும் பெண்ணை கடுமையாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, அச்சம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மின்னஞ்சல் ஊடாக சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.