வெள்ளத்தில் சிக்சிய பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் விஷ்ணு விஷாலுடன் மீட்பு!

டிசம்பர் 6, 2023 - 16:03
வெள்ளத்தில் சிக்சிய பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் விஷ்ணு விஷாலுடன் மீட்பு!

இந்தியா - சென்னை வெள்ளத்திலிருந்து பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவர் சென்னையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் காரப்பாக்கம் வட்டாரத்தில் குடியிருக்கிறார்.

அமிர் கானின் தாயார் ஸீனத் ஹுசைன்  சென்னையில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்கிறார்.

இதனால் அவரைக் கவனிப்பதற்கு அமிர் கான், கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து சென்னையில் தங்கியுள்ளார். 

இந்நிலையில், வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது என்றும் இணையத் தொடர்பு, மின்சாரம் இல்லை என்றும் விஷ்ணு அண்மையில் X சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டு, உதவி கோரினார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் குழுவினர் விஷ்ணு, அவரது மனைவி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் ஆகியோரைக் காப்பாற்றினர்.

தாங்கள் படகில் அழைத்துச் செல்லப்படும் படங்களையும் விஷ்ணு பகிர்ந்துகொண்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!