விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய - அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்ற இருவரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஆணும் 38 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர். கெப் வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
48 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் கெப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிரானேகம, வட்டகல சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.