பரோட்டா உட்கொண்டதால் மாடுகள் ஐந்து மரணம்!
கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், குறித்த பண்ணையின் உரிமையாளர் மாடுகளுக்குப் பரோட்டா, பலாப்பழம் மற்றும் புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

பண்ணை உரிமையாளர் ஒருவர், தான் வளர்த்து வந்த மாடுகளுக்கு அளவுக்கு அதிகமான பரோட்டாவும் பலாப்பழமும் உண்ணக்கொடுத்தமையால், 5 மாடுகள் மரணித்துள்ள துயரச் சம்வம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை (15 ஜூன்) மாடுகளின் உடல்நலம் குன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மேலும் 9 மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக The Hindustan Times செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், குறித்த பண்ணையின் உரிமையாளர் மாடுகளுக்குப் பரோட்டா, பலாப்பழம் மற்றும் புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
அதனால் மாடுகளின் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து அவை மரணித்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார். பண்ணை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
குறித்த பண்ணை உரிமையாளர், சுமார் 20 ஆண்டுகளாக மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.