லிந்துலை லயன் குடியிருப்பில் தீ
லிந்துலை தோட்ட லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிந்துலை பெரிய இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஏற்பட்ட தீ பல வீடுகளுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீப்பரவல் சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெரிய இராணிவத்தை தோட்டத்தின் முதலாம் தொடரில் உள்ள 24 வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
லிந்துலை பொலிஸாரும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.