முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! அறிவிப்பு வெளியானது 

இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜுலை 27, 2023 - 19:16
முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! அறிவிப்பு வெளியானது 

அமைச்சரவை தீர்மானத்தின் படி சுகாதார அமைச்சின் மூத்த மற்றும் இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சி. கருணாரத்னவின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் அனைத்து மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அனைத்து பிரதம நிதி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி மேலதிக கடமை கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர உத்தியோகத்தர்களின் தினசரி வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு கைரேகை இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்கும் போது கைரேகை பதியும் முறைமை இதுவரையில் இருந்ததில்லை எனவும், அவ்வாறான தீர்மானம் வைத்தியர்களின் சேவை அமைப்புக்கு எதிரானது எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர அதிகாரிகள் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!