கோழி இறைச்சி விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

COLOMBO (News21) – கோழி இறைச்சி விலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் 21, 2023 - 13:15
செப்டெம்பர் 21, 2023 - 13:16
கோழி இறைச்சி விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

COLOMBO (News21) – கோழி இறைச்சி விலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி ரூ. 1250 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், இன்னும்  200 ரூபாயால் இந்த விலை குறைக்கப்பட வேண்டும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் விலை குறைப்புக்கு உடன்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாதாந்த  கோழியிறைச்சி நுகர்வு சுமார் 2.2 மில்லியன் கிலோகிராம் ஆகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!