லிந்துலையில் 3 வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய தந்தை
ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தை, தன்னுடைய 3 வயதுடைய குழந்தையின் மீது கொதிநீரை ஊற்றியுள்ளார்.
இந்த சம்பவம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றது.
சந்தேக நபரான தந்தையின் மனைவி கொழும்பில் வேலைச் செய்து வருகின்றார். அவருடைய ஆறு குழந்தைகளையும், அவரது அம்மாவே கவனித்து வருகின்றார்.
எனினும், மதுபோதையில் வந்த தந்தை தனது 6 ஆவது பிள்ளையின் மீது கொதி நீரை ஊற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பிள்ளை மீது கொதி நீரை ஊற்றிய நபர் பிரிதொரு வழக்கில் ஆஜராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வைத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.