10 பெண்களுடன் பாலியல் உறவு.. மனைவியை பிரிந்த நடிகர்
விநாயகன் தனது மனைவியை பிரிந்ததாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

மலையாள திரையுலகில் கடந்த 1995 ஆம் ஆண்டு மாந்திரீகம் என்ற படத்தின் முலம் நடிகராக அறிமுகமானவர் விநாயகன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் விஷாலின் திமிரு படத்தில் மாற்றுத்திறனாளி வில்லனாக நடித்து இருந்தார். அதே போல் தனுஷின் மரியான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனிடையே விநாயகன் தனது மனைவியை பிரிந்ததாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக் நேரலையில் கூறுகையில், "நான் மலையாள நடிகர் விநாயகன். என் மனைவி பபிதாவுடனான திருமண உறவை முடிந்துவிட்டன. அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் நடிகை நவ்யா நாயர் நடித்த ஒருத்தி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய அவரின் கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
அந்நிகழ்வில் விநாயகனிடம் பெண்கள் வைக்கும், மீ டூ குற்றச்சாட்டு பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, "நான் வாழ்க்கையில் 10 பெண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டு இருக்கிறேன்.
பெண்கள் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது மீடூ குற்றத்தில் வராது" என்றார். இந்த விவகாரம் அவரது குடும்பத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது அதனால் தான் இவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.