லைவ் வீடியோவில் அழுகை.. ஹோட்டல் அறையில் சடலம்.. இளம் நடிகை மர்ம மரணம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார் அகான்க்ஷா.

உத்தப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் 1997-ம் ஆண்டு பிறந்தவர் நடிகை அகன்ஷா துபே. இவர் சிறு வயது முதலே நடனம், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆரம்ப காலத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான அகன்ஷாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் பின் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பதிவு செய்து வந்தார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
இதன் பின் மாடலான அகன்ஷா, தனது 17வது வயதில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின 'முஜ்சே ஷாதி கரோகி', 'வீரோன் கே வீர்', 'ஃபைட்டர் கிங்' உள்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகை அகன்ஷா துபே, அங்குள்ள ஓட்டலில் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகன்ஷா துபேசாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இன்ஸ்டா லைவில் வந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி
இதுகுறித்து வாரணாசி போலீஸார் கூறுகையில், " நடிகை அகன்ஷா துபே, புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் வாரணாசிக்கு வந்திருந்தார். இங்குள்ள சாரநாத் ஓட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.
நேற்றிரவு வழக்கம்போல படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டி அழைத்துள்ளனர்.
இருப்பினும், கதவு திறக்கப்படாததால் மாற்றுச்சாவியை வைத்து கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், அகன்ஷா துபே தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது" என்றனர்.
இதையடுத்து அகன்ஷா துபேயின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகன்ஷா போஜ்புரி பாடலுக்கு ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதில் கண்ணாடி முன் நின்று அவர் நடனமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.ஆனால், இறப்பதற்கு சில நிமிட நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அகன்ஷா, கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால், அவரது ரசிகர்களும், போலீஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.