Fact Check: சானியா மிர்சாவுடன் முகமது சமி திருமணமா? உண்மை இதோ!
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தார்.
அத்துடன், இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்தார்.
இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், இருவரின் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும், இது தொடர்பில் சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “இந்த தகவல் முற்றிலும் வதந்தியே. இதுவரை முகமது சமியை சானியா மிர்சா சந்தித்தது கூட கிடையாது. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என கூறி இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.