முகக்கவச விலை வேகமாக உயர்ந்து வருகிறது.. ஒரு முகக்கவசத்துக்கு ஐம்பது ரூபாய்..
உடனடியாக முகக்கவசங்கள் விலையை 10 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்குமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.
தற்போது, சாதாரண முகக்கவசத்தின் விலை 50 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உடனடியாக முகக்கவசங்கள் விலையை 10 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.