அதிக வெப்பம்; பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.