கல்வியியற் கல்லூரிகளுக்கு 7,500 மாணவர்களை உள்ளீர்க்க எதிர்பார்ப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை 5,000இல் இருந்து 7,500 வரை உயர்த்த எதிர்பார்த்திருப்பதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி : கல்வித்துறையில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி பணிப்புரை
இதேவேளை, கல்வி சீர்திருத்தச் செயற்பாட்டுக்கமைய, கொரியா, ஜேர்மன், பிரான்ஸ், ஹிந்தி மற்றும் ஜப்பான் ஆகிய மொழிகளுக்கான ஆசிரியர்களைப் பாடசாலை கட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.