முதல் மூன்று மாதங்களில் 61 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள கலால் திணைக்களம்
இலங்கையின் கலால் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது.

இலங்கையின் கலால் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த திணைக்களத்துக்கு 2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்காக 242 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை மூலம் திணைக்களம் 61.3 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.
முதல் காலாண்டுக்கான இலக்கு 42 பில்லியன் ரூபாய் ஆகும்.
மதுபான போத்தல் மூடியில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள், போலி மதுபானங்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வருவாயை அதிகரிக்க பெரிதும் உதவியது என்று திணைக்களத்தின் தலைவர் யு.எல். உதய குமார கூறியுள்ளார்.