வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலமொன்றை வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டார்.
விக்ரமசிங்கவை ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முதலில் கோரப்பட்டிருந்த போதிலும், அன்று வரமுடியவில்லை என தெரிவித்த நிலையில், அதற்கு பதிலாக இன்று ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.