சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பெப்ரவரி 27, 2025 - 16:31
பெப்ரவரி 27, 2025 - 16:31
சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அத்துடன், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும், இதில் இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இந்த நிகழ்வில் பேச உள்ளனர்.

விக்ரமசிங்கவின் உரை தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  பிரதமர் மோடியுடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், விக்ரமசிங்க தனது பயணத்தின் போது முக்கிய இந்திய வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

அண்மைய மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்றாவது விஜயம் இதுவாகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!