முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு
இந்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 10ஆம் மற்றும் 11ஆம் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.