தொழிலாளர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை: தோட்ட நிறுவனங்கள்

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கூலியை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

மே 2, 2024 - 11:08
மே 2, 2024 - 11:19
தொழிலாளர் சம்பளத்தை அதிகரிப்பது சாத்தியமில்லை: தோட்ட நிறுவனங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அவ்வாறு செய்ய முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கூலியை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டார்.

இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாயாகவும்  மொத்த நாள் சம்பளம் 1,700 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறு தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என,  பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

"ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வினால் உலக சந்தையில் இடத்தை இழந்து மிக வேகமாக நஷ்டமடைந்து வருகின்றது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!