அதிவேக அரைசதம் அடித்த டி காக்... சூர்யகுமாரால் கூட தொட முடியாத சாதனை!

அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து நடப்பு உலகக்கோப்பை தொடரின் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 

ஜுன் 22, 2024 - 11:31
அதிவேக அரைசதம் அடித்த டி காக்... சூர்யகுமாரால் கூட தொட முடியாத சாதனை!

டி20 உலகக் கோப்பை  சூப்பர் 8 சுற்றின் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு மூத்த வீரர் க்வின்டன் டி காக் அபார துவக்கம் அளித்தார். 

அவர் 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின்னர் 38 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

முன்னதாக அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரை சதம் அடித்து நடப்பு உலகக்கோப்பை தொடரின் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 

இந்த பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 27 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். 

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டோனிஸ் (25 பந்துகள்), நான்காவது இடத்தில் ஸ்காட்லாந்து அணியின் பிரன்டன் மேக்முலன் (26 பந்துகள்), க்வின்டன் டி காக் (26 பந்துகள்), ஆறாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் (27 பந்துகள்) உள்ளனர்.

டி காக் இரண்டு முறை 30-க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. 

டி காக் 65 ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!