மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு - வெளியான தகவல்!
மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், பின்னர் மின்சார சபையினால் நேற்று மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்துக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை என மின்சார சபை குற்றச்சாட்டு முன்வைத்ததிருந்தனர்.
பின்னர் அண்மையில் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.