தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 500ஐ தாண்டின; வன்முறை சம்பவமும் பதிவு!

குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 17, 2024 - 20:24
தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 500ஐ தாண்டின; வன்முறை சம்பவமும் பதிவு!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்று மாலை வரை 519 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.

ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 16 (நேற்று) வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று (16) மாத்திரம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

519 முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 306 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 213 முறைப்பாடுகளும் ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!