தொடர்ந்து வலுவிழக்கும் அமெரிக்க டொலர்.. அதிகரிக்கும் ரூபாயின் பெறுமதி!
கனேடிய டொலரின் விற்பனை விலை 231.78 ரூபாயாகவும், கொள்வனவு விலை 222.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று(14) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310.64 ரூபாயாகவும், கொள்வனவு விலை 301.01 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 231.78 ரூபாயாகவும், கொள்வனவு விலை 222.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.50 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 327.83 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.