டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

செப்டெம்பர் 11, 2023 - 18:43
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.34  ரூபாயிலிருந்து 313.85  ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.11  ரூபாயிலிருந்து 328.60 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாயிலிருந்து 314.24 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 326  ரூபாயிலிருந்து 325.50 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317  ரூபாய் மற்றும் 328  ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 29 சதம் - விற்பனை பெறுமதி 327 ரூபாய் 60 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 92 சதம் - விற்பனை பெறுமதி 411 ரூபாய் 21 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபாய் 48 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபாய் 41 சதம்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 71 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபாய் 22 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபாய் 33 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபாய் 16 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய்68 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபாய்00 சதம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!