ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் நாளை கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு விவாதங்கள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.
இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை பாதுகாப்பது மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கிட்டத்தட்ட 2 வாரங்களாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.