தினேஸ் ஷாப்டர் மரணத்துக்கான காரணம் வெளியானது - சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு
கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் கடந்த ஆண்டு இறுதியில் பொரளை பொதுமயானத்தில் கார் ஒன்றில் இருந்து குற்றுயிராய் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், தினேஸ் ஷாப்டரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்து உடனடியாக நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிஐடி பணிப்பாளருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.
கழுத்துப் பகுதி மற்றும் முகத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே தினேஸ் ஷாப்டரின் மரணம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கை மற்றும் ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.