திமுத் கருணாரத்ன நீக்கம்; வெளியான தகவல்
உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறுகின்றது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறுகின்றது.
இந்த போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள், ஹராரே மைதானத்தில் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, காயம் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இன்றைய போட்டியில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி இதுவரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.