விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், விசாரணை குழுவின் முன்னிலையில் இன்று, மீண்டும் முன்னிலையாக உள்ளார்.

மே 28, 2025 - 12:01

தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் அவர் இரண்டாவது தடவையாக ஆஜராக உள்ளார்.
 
தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவராக, உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன உள்ளார்.

அத்துடன், நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர். 
 
இந்த குழுவில் முதல் முறையாகக் கடந்த 19 ஆம் திகதி முன்னிலையான தேசபந்து தென்னக்கோன், அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த நிலையில், குறித்த குழுவினால் அவை நிராகரிக்கப்பட்டன. 
 
அதன்போது, அவருக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரமும் கையளிக்கப்பட்டிருந்தது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!