பாடசாலை விடுமுறையில் திடீர் மாற்றம் : விடுமுறை நாட்கள் அதிகரிப்பு
அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (17) தெரிவித்துள்ளது.
இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளுக்கான பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து, அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.