ரயில் டிக்கெட் பரிசோதனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 27, 2023 - 16:25
ரயில் டிக்கெட் பரிசோதனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கொவிட் -19 தொற்றுநோய்களின் போது ரயில் பயணிகளின் டிக்கெட்-பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மருதானை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த பயணிகளிடமிருந்து 225,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்த 72 பயணிகளிடமிருந்து இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!