107 வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 107 வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட ஊழியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத காரணத்தினாலேயே, அந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காட்சிக்காக அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த வாகனங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.