மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு உயர்த்தி அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

மே 18, 2024 - 00:24
மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

மூத்த பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு நிதியமைச்சில் கூடிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வட்டி விகிதத்தை எவ்வளவு உயர்த்தி அதற்கேற்ப செயல்பட முடியும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் சுமார் 11 லட்சம் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை முறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரே நபர் பல வங்கிக் கணக்குகளைப் பராமரித்தல், அந்தக் கணக்குகளில் பிற தரப்பினரின் பணத்தை வைப்புச் செய்தல் போன்றவை குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!