படகு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: வெறிச்சோடியது எலிபெண்டா தீவு

சுற்றுலா பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியா, பாவுச்சா தக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படகு மூலம் சென்று வருகின்றனர். 

டிசம்பர் 20, 2024 - 12:37
டிசம்பர் 20, 2024 - 12:37
படகு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: வெறிச்சோடியது எலிபெண்டா தீவு

புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மும்பையில் உள்ள எலிபெண்டா தீவு உள்ளது. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் அங்கு செல்கின்றனர்.

எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றது என்ற நிலையில், சுற்றுலா பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியா, பாவுச்சா தக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படகு மூலம் சென்று வருகின்றனர். 

குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் எலிபெண்டா தீவுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் மாலை எலிபெண்டா தீவுக்கு சென்ற படகு விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, நேற்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபெண்டா செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டதுடன், எலிபெண்டா தீவு வெறிச்சோடி காணப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!