சத்தமே இல்லாமல் வார்னர் செய்த சாதனை.. வேடிக்கை பார்த்த இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார். அதன் மூலம், அவர் அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.
தற்போது நடந்து வரும் ஒருநாள் போட்டிகள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அவர் அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது.
ஆனாலும், டேவிட் வார்னரை இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அவரது ஃபார்ம் உச்சகட்டத்தில் உள்ளது. தற்போதைய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வார்னர் 53 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்கள் அடித்தது அவர்தான்.
அடுத்ததாக அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 39 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இருந்தார். அஸ்வின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
அந்தப் போட்டியில் ஸீன் அபாட் 54 ரன்கள் எடுத்து வார்னரை விட ஒரு ரன் கூடுதலாக எடுத்து இருந்தார். மற்ற ஆஸ்திரேலிய வீரர்களை விட வார்னர் அதிக ரன்கள் எடுத்து இருந்தார்.
அடுத்ததாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் டேவிட் வார்னர் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை துவக்கினார். பும்ரா, சிராஜ் போன்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எல்லாம் பவுண்டரிகள் சர்வ சாதரணமாக பறந்தது. வார்னரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வீரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
8 ஓவர்களுக்குள் அரைசதம் அடித்த வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மற்றொரு துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
வார்னர் தொடர்ந்து ஒரே தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து சாதனை ஒன்றை செய்தார்.
இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் அரைசதம் அடித்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் மட்டுமே.
அந்த சாதனையை தற்போது மீண்டும் செய்து இருக்கிறார் டேவிட் வார்னர். இருவருமே இந்திய அணிக்கு எதிராகவே இந்த சாதனையை செய்து இருக்கின்றனர்.