ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலை ஆதரிக்கிறது

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18, 2024 - 20:05
ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலை ஆதரிக்கிறது

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவாதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக, கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (18) நண்பகல் 12 மணிக்கு தேசிய சபை கூடியது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகள் அறிவித்தன.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!