பாடசாலை மாணவர்களுக்கான உணவு தொடர்பில் முக்கிய தீர்மானம்
பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சி கவனம் செலுத்தி உள்ளது.

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சி கவனம் செலுத்தி உள்ளது.
தற்போதைய விலை உயர்வு காரணமாக 85 ரூபாய்க்கு மதிய உணவை வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தொகை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றதுடன், இதில் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதுவரை சுமார் பத்து இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.