அடுத்தடுத்து பவுண்டரிகள்... அமைதியான 1 இலட்சம் ரசிகர்கள்.. வர்ணனையில் கிண்டல்!

இதன்பின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சஃபீக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஒக்டோபர் 14, 2023 - 18:50
அடுத்தடுத்து பவுண்டரிகள்... அமைதியான 1 இலட்சம் ரசிகர்கள்.. வர்ணனையில் கிண்டல்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசப்பட்ட போது, மைதானத்தில் கூடியிருந்த ஒரு லட்சம் ரசிகர்களும் அமைதி நிலைக்கு சென்றது வர்ணனையில் கிண்டல் செய்யப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு வரும் என்பதால், இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்பின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சஃபீக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அந்த ஓவரை பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான அப்துல்லா சஃபீக் எதிர்கொண்டார். 5 பந்துகள் டாட் பாலாக வீசப்பட்ட நிலையில், இந்திய ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது.

ஆனால் பும்ரா வீசிய கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் அப்துல்லா. அதன்பின் இரண்டாவது ஓவரை வீசுவதற்காக முகமது சிராஜ் அழைக்கப்பட்டார். முதல் பந்தை இன்ஸ்விங்கராக வீசியதை இமாம் உல் ஹக் பவுண்டரியாக மாற்றினார். 

2வது பந்திலும் பவுண்டரி அடிக்கப்பட, சிராஜ் மீது அழுத்தம் அதிகரித்தது. இதன்பின் மீண்டும் 4வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்ட, இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த கரகோஷமும் குறைந்து மைதானமே அமைதி நிலைக்கு சென்றது.

இதனை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது ரவி சாஸ்திரியை பார்த்து நாசர் ஹுசைன், இந்திய ரசிகர்களின் குரலையே காண முடியவில்லை என்று கிண்டல் செய்தார். அதற்கு ரவி சாஸ்திரி, ரசிகர்கள் இந்தியாவின் எழுச்சிக்காக காத்திருப்பதாக பதில் அளித்தார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம் இந்திய ரசிகர்களின் அழுத்தத்தை எப்படி சமாளிப்பீர்காள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரிக்கி பாண்டிங், இந்திய மண்ணில் நான் பவுண்டரி விளாசினால் மைதானத்தில் ஒரு அமைதி ஏற்படும். 

அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிதான் சமாளிப்பேன் என்று பதில் அளித்தார். பாகிஸ்தான் அணியும் ரிக்கி பாண்டிங்கின் அணுகுமுறையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!