பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்களுக்கு இனி ஆபத்து!

ஆண்டுக்கு 12 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

ஜனவரி 10, 2024 - 22:09
பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்களுக்கு இனி ஆபத்து!

பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்கள் இனி  விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்தார். 

இதற்காக வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் தொடர்பில் ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமிக்க உள்நாட்டு இறை வரித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை மேற்படி குழு ஆராயும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

இதேவேளை, மாதத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

ஆண்டுக்கு 12 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் கூறினார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!